கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது: போலி ஆதார், ரேஷன் கார்டு பறிமுதல்

Date:

மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் விமானப் போக்​கு​வரத்து நிறு​வனம் ஒன்​றில் பணி​யாற்றி வந்​தவர் சாந்தா பால். பகுதி நேர​மாக மாடலிங் தொழிலிலும் ஈடு​பட்டு வந்​தார். இந்​நிலை​யில் போலி ஆவணங்​களை பயன்​படுத்தி இந்​தி​யா​வில் வசித்து வந்​த​தாக இவரை கடந்த செவ்​வாய்க்​கிழமை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: சாந்தா பால், கடந்த 2016-ல் ஆண்டு இந்தியா – வங்​கதேசம் இடையி​லான அழகிப் போட்​டியல் வங்​கதேசம் சார்​பில் பங்​கேற்​றார். 2019-ல் இவர் ஆசிய அழகிப் போட்​டி​யிலும் பங்​கேற்​றுள்​ளார். மாடலிங் துறை​யில் வெற்​றியை தொடர்ந்​து, அவர் நடிப்புத் தொழிலுக்கு மாறினார். இறு​தி​யில் வங்​கதேச விமான நிறு​வனம் ஒன்​றில் சேர்ந்​தார். இவர், கடந்த 2023-ல் வங்​கதேசத்​தின் பாரி​சாலில் இருந்து அந்​நாட்டு பாஸ்​போர்ட் மூலம் இந்​தியா வந்​தார். கொல்​கத்​தா​வில் ஒரு சொத்து முகவர் மூலம் அடுக்​கு​மாடி குடி​யிருப்பை வாடகைக்கு எடுத்​தார்.

முஸ்​லிம் இளைஞனை திரு​மணம் செய்​தது பெற்​றோருக்கு பிடிக்​காத​தால் பிரிந்து வாழ்​வ​தாக குடி​யிருப்பு உரிமை​யாளரிடம் கூறி​யுள்​ளார். வாடகை ஒப்​பந்​தத்​துக்​காக ஆதார், பான் கார்​டு, வாக்​காளர் அடை​யாள அட்டை போன்ற போலி இந்​திய ஆவணங்​களை கொடுத்​து உள்​ளார்.

மேற்கு வங்​கத்​தின் நாடியா மாவட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அவரது திருமண சான்​றிதழின்​படி ஆந்​தி​ராவை சேர்ந்த ஷேக் முகமது அஷ்ரப் என்​பவரை இவர் திரு​மணம் செய்​துள்​ளார். அஷ்ரப் வர்த்தக கப்​பல் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இவரும் பிறகு கோல்ஃப் கார்​டன் பகு​திக்கு இடம்​பெயர்ந்து ஒன்​றாக வாழத் தொடங்​கினர்.

சாந்தா பால், உள்​ளூர் முகவர் ஒரு​வர் உதவி​யுடன் ரேஷன் கார்​டு,ஆதார் அட்​டை, வாக்​காளர் அட்​டை, பான் கார்டு உள்​ளிட்ட இந்​திய அடை​யாள ஆவணங்​களை அவர் போலி​யாக உரு​வாக்​கி​யுள்​ளார். அவரை வரும் 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் வி​சா​ரிக்க நீதி​மன்​றம்​ அனு​ம​தி வழங்​கி​யுள்​ளது. இவ்​வாறு போலீஸ் அதிகாரி கூறி​னார்​.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்