கேகாலை சிறை சிறப்பு அறையில் முன்னாள் கடற்படைத்தளபதி

Date:

பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கேகாலை சிறைச்சாலையில் உள்ள ஒரு சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் சுமார் 15 கைதிகள் அந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரை இந்த அறைக்கு மாற்ற சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவ விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நேற்று முன்தினம் (28) கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று (30) அடையாள அணிவகுப்புக்காக அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்