ஹமாஸ் ஆயுதங்களை களைந்து காசாவின் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்: பாலஸ்தீன அதிகாரசபை

Date:

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பை மீட்டெடுக்க, ஹமாஸ் ஆயுதங்களை களைந்து, காசாவின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா திங்களன்று தெரிவித்தார்.

“காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் முற்றிலுமாக விலக வேண்டும், ஹமாஸ் அந்தப் பகுதியின் மீதான தனது கட்டுப்பாட்டை கைவிட்டு, அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கான இரு நாடுகள் தீர்வு குறித்த மாநாட்டில் முஸ்தபா கூறினார்.

பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாஇணைந்து தலைமை தாங்கும் மாநாட்டில், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் இரு நாடுகள் தீர்வுக்கு மாற்று இல்லை என்று பிரான்சின் உயர்மட்ட தூதர் திங்களன்று தெரிவித்தார்.

“இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழ வேண்டும் என்ற நியாயமான அபிலாஷைகளுக்கு பதிலளிக்க ஒரு அரசியல், இரு நாடுகள் தீர்வு மட்டுமே உதவும். வேறு மாற்று இல்லை,” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்தில் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்