ரஜினி சுயசரிதை எழுதுவதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்

Date:

ரஜினி சுயசரிதை எழுதி வருவதை உறுதி செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ஓகஸ்ட் 14ஆம் திகதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ படம் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக அளித்த பேட்டியொன்றில் ரஜினி தனது சுயசரிதையை எழுதி வருவதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக, இது குறித்த தகவல் வெளியானாலும் யாருமே உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

ரஜினி சுயசரிதை குறித்து லோகேஷ் கனகராஜ், “’கூலி’ படத்தின் கடைசி 2 ஷெட்டியூலில் ரஜினி சார் அவருடைய சுயசரிதை எழுதுவதில் மும்முரமாக இருந்தார். தினமும் மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் போது, இப்போது எந்த எபிசோட் சார் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்பேன். இந்த வயதில் இதெல்லாம் நடந்தது என்றெல்லாம் சொல்வார். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுமே எவ்வளவு தடைகளை தாண்டி இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என்பதை ஒப்புக் கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்பேட்டியில் ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்துவிட்டு நீண்ட ஒய்வில் இருக்கப் போகிறார் ரஜினி எனவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சமயத்தில் தனது சுயசரிதையை முழுமையாக முடிக்க ரஜினி திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்