ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம்: சீமான் அறிவிப்பு

Date:

தேனி வனப் பகு​தி​யில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்​கும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். மதுரை மாவட்​டம் விராதனூரில் ‘மேய்ச்​சல் நிலம் எங்​கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-​மாடு​கள் மாநாடு நேற்று நடை​பெற்​றது.

இதில் சீமான் பேசி​ய​தாவது: ஆடு, மாடு​கள் எங்​களின் செல்​வங்​கள். எங்​கள் வாழ்க்​கை, கலாச்​சா​ரத்​துடன் இணைந்து வாழும் உயி​ரினங்​கள். ஒவ்​வொரு​வர் வீட்​டிலும் உறவினர்​போல ஆடு, மாடு​களை வளர்த்து வருகிறோம். காடும், காடு சார்ந்த இடங்​களில் வாழ்ந்த ஆடு, மாடு​கள், தற்​போது அதே காட்​டுக்​குள் நுழைய தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த தடையை உடைக்க வேண்​டும்.

மாட்​டுக்​கறி வர்த்​தகம் ரூ.30 ஆயிரம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. பால் வர்த்​தகம் மூலம் ரூ.13.5 லட்​சம் கோடி வரு​வாய் கிடைக்​கிறது. இதில் தமிழகத்​தின் பங்கு ரூ.1.38 லட்​சம் கோடி​யாகும். இந்த பால் சந்தை மதிப்பை கூட்​டு​வதற்கு பதில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு மது அருந்​த​வைத்​து, தாய்​மார்​களை கண்​கலங்​கச் செய்​கின்​றனர்.

இந்​தி​யா​வில் ரூ.1.7 கோடி ஹெக்​டேர் மேய்ச்​சல் நிலம் இருப்​ப​தாக​வும், தமிழகத்​தில் 12 லட்​சம் ஹெக்​டேர் மேய்ச்​சல் நிலம் இருப்​ப​தாக​வும் கூறுகின்​றனர். இந்த மேய்ச்​சல் நிலங்​களை விமான நிலை​யம், பேருந்து நிலை​யம் கட்​டு​வதற்​காக அபகரிக்​கின்​றனர். கால்​நடைகளை காட்​டுக்​குள் மேய விடு​வ​தில்​லை, சமவெளி​யிலும் மேய விடு​வ​தில்​லை.

மாடு​கள் மேய்ந்​தால் காட்​டில் ஆறு, அருவி உரு​வா​காது என்​கின்​றனர். நொய்​யல் ஆறு, வைகை ஆறு நிலை எப்​படி இருக்​கிறது. இந்த ஆறுகள் சாக்​கடைகளாக மாறி​யுள்​ளன. 32 ஆறுகள் மண் அள்​ளப்​பட்​டு, சீரழிக்​கப்​பட்​டுள்​ளன. வன விலங்​கு​களைப் பாது​காக்க மேய்ச்​சலுக்கு தடை விதிப்​ப​தாக கூறு​பவர்​கள், குவாரிக்​காக மலைகளை அழிக்​கின்​றனர்.

தேனி மாவட்​டத்​தில் காட்​டுக்​குள் மாட்டை மேய்ச்​சலுக்கு ஓட்​டிச் சென்ற விவ​சாயி சன்​னாசி வனத் துறை​யால் தாக்​கப்​பட்​டார். அதே இடத்​தில் ஆக. 3-ம் தேதி பல்​லா​யிரம்​ ​மாடு​களை ​காட்​டுக்​குள்​ மேய்​ச்​சலுக்​கு அழைத்​துச்​ சென்​று போ​ராட்​டம்​ நடத்​து​வோம்​. இவ்​​வாறு சீ​மான்​ பேசி​னார்​.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிசார் வாகனங்களை நிறுத்தி சாரதிகளை மருத்துவ பரிசோதிக்கும் விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை முன்னெடுப்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவித்து வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை...

பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பம்

இலங்கை இன்று (நவம்பர் 11) கொழும்பு துறைமுக நகரத்தில் (Colombo Port...

விடுதியில் இளம்பெண் கொலை: காதலன் தலைமறைவு

நுவரெலியாவின் மகாஸ்தோட்டப் பகுதியில் உள்ள தங்குமிடம் (cabana) ஒன்றில் இளம் பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்