செம்மணியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 65 ஆக உயர்வு!

Date:

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும், “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” மனித புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பை, காலணிகள், கண்ணாடி வளையல்கள், ஆடையை ஒத்த துணிகள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்