இலங்கைக்கான பிரித்தானியா தூதரை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இந்த சந்திப்பு நடந்தது
இதன்போது எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவுள்ள இலங்கை விவகாரம் பற்றி பேசப்பட்டதாக சுமந்திரன் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.




