யாழ்ப்பாணம், பருத்தித்துறை- கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள் இருந்து மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன.
குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவ முகாமிலிருந்து சுமார் 500 மீற்றர்கள் தொலைவிலுள்ள பற்றையான காணிக்குள்ளிருந்து எலும்புக்கூடு மீட்கப்பட்டது. ஒரு மனிதனின் எலும்புக்கூட்டு பாகங்களே பல பகுதிகளில் காணப்பட்டுள்ளது.




