கம்பஹாவில் 10 மணித்தியால நீர்வெட்டு!

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பின் திருத்தம் மற்றும் பிரதான அமைப்புகளுடனான அபிவிருத்திப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரனின் பிரம்மாண்ட கட்அவுட் இலங்கையில் வைக்கப்பட்டதா? வைரலான படத்தின் உண்மை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும், கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தமிழீழ...

பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்த 13 வயது மாணவி உயிரிழப்பு

நுவரெலியா, நோர்வூட் பகுதியில் பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்து 13...

அரச ஊழியர்களுக்கு 2027 ஜனவரி முதல் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 2027 ஜனவரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்