முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது!

Date:

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நீண்டகால வருமான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக, நீதிமன்றம்பிறப்பித்த திறந்த பிடியாணையை தொடர்ந்து, தொழிலதிபர் குஷானி நாணயக்கார- முன்னாள் இராஜாங்க அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி- மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, பல ஆண்டுகளாக ரூ. 700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரியை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

நாணயக்கார-கிரீன் லங்கா டிராவல்ஸ், கிரீன் சீட் லங்கா மற்றும் கிரீன் ஸ்ரீ லங்கா ஷிப்பிங் ஆகியவற்றின் இயக்குநராக உள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பலமுறை அறிவிப்புகள் இருந்தபோதிலும், இந்த நிறுவனங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்திற்கான வரிகளை அவர் வேண்டுமென்றே ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளுக்கு இணங்கத் தவறிய பின்னர், துறை சட்ட நடவடிக்கை எடுத்தது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாததால், கொழும்பு நீதவான் நீதிமன்றம் மூன்று அழைப்பாணைகளையும் பின்னர் ஒரு திறந்த பிடியாணையையும் பிறப்பித்தது.

அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, பதில் காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரியவுக்கு நீதிமன்றம் நேரடி உத்தரவைப் பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகரவின் மேற்பார்வையின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிவு சனிக்கிழமை நாரஹேன்பிட்டியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நாணயக்காரவைக் கைது செய்தது.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில்,...

‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்...

யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை!

நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நுவரெலியா பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்