ஒருநாள் கிரிக்கெட்டில் மக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் கிளாசன் ஓய்வு அறிவிப்பு!

Date:

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோல தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீப்பர், துடுப்பாட்டக்காரர் ஹென்ரிச் கிளாசனும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரே நாளில் இரண்டு அதிரடி ஆட்டக்காரர்கள் ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மக்ஸ்வெல்: கிரிக்கெட் உலகில் ‘பிக்-ஷோ’ என செல்லமாக அழைக்கப்படுபவர் மக்ஸ்வெல். கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 149 போட்டிகளில் 3,990 ரன்களை அவர் எடுத்துள்ளார். சராசரி 33.81, ஸ்ட்ரைக் ரேட் 126.70. ஓஃப் ஸ்பின்னரான அவர் 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 91 பிடிகளை எடுத்துள்ளார்.

2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில் முக்கிய அங்கம் வகித்த வீரர். இதில் கடந்த 2023ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 201 ரன்களை விளாசினார். அந்த ஆட்டத்தில் ஆஸி. அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து பின்னடைவில் இருந்த நிலையில் மக்ஸ்வெல் ஆடிய இன்னிங்ஸ் அது. அதை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஒன்று என்றும் சொல்லலாம். தசைப்பிடிப்பு உடன் போராடி அந்த ஆட்டத்தை ஆஸி.க்கு அவர் வென்று கொடுத்தார்.

“தேர்வுக்குழுவின் தலைவர் ஜோர்ஜ் பெய்லி உடன் நான் பேசினேன். அப்போது 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை குறித்து நாங்கள் பேசினோம். ‘என்னால் அது முடியாது என நினைக்கிறேன். அதனால் எனது இடத்தில் மாற்று வீரரை முயற்சிக்க திட்டமிடலாம். மேலும், அதன் மூலம் அந்த இடத்தை அவர்களுடையதாக மாற்றாலம்’ என அவரிடம் சொன்னேன். நிச்சயம் அந்த இடத்துக்கு சிறந்த வீரர்கள் பலர் ஓப்ஷன்களாக இருப்பார்கள். இன்னும் இரண்டு தொடர்கள் என சொல்லி, சுயநலத்தோடு விளையாட நான் விரும்பவில்லை” என மக்ஸ்வெல் கூறியுள்ளார்.

கிளாசன்: “இது எனக்கு சோகமான நாள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனக்கும், எனது குடும்பத்தின் எதிர்காலத்துக்கும் எது சரி என்பது குறித்து தீர்மானிக்க எனக்கு நேரம் தேவைப்பட்டது. குடும்பத்துடன் நேரம் செலவிடவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என கிளாசன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்காக 60 ஒருநாள், 58 ரி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தாயின் தாலிக்கொடியை திருடி காதலனிற்கு கொடுத்த பணம்; உறவுப்பெண் மீது பழிபோட்டு நாடகம்: வங்கி ஊழியரான 22 வயது யுவதி கைது!

மட்டக்களப்பில் காதலனுக்காக தனது தாயின் எட்டரை பவுன் தாலிக்கொடியை திருடி அதனை...

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்