கிளிநொச்சி வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த குடும்பஸ்தர் பலி

Date:

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் நேற்று (மே.24) இரவு மோட்டார் சைக்கிளுடன் விழுந்து 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி 190 இலக்கத்தில் வசிக்கும் சோமு கஜேந்திரமூர்த்தி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், கிளிநொச்சி மாவட்ட பரந்தன் விவசாய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றினார்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் சிவபால சுப்பிரமணியம் நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து மரண விசாரணைக்காக சடலத்தை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பணித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல கோணங்களில்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்