பிரபல பங்களாதேஷ் நடிகை கைது: இப்படியுமொரு வழக்கா என மக்கள் அதிருப்தி!

Date:

பங்களாதேஷ் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் வாழ்க்கை வரலாற்று படத்​தில் நடித்து புகழ்​பெற்​ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை முயற்சி வழக்​கில் கைது செய்​யப்​பட்டுள்​ளார்.

ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்​தாண்டு ஜூலை மாதத்​தில் உள்​நாட்டு கலவரம் வெடித்​தது. இதில், பலர் கொல்லப்பட்டனர். பின்னர், ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடினார். அவர் மீது கொலை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இப்படியான, வழக்கொன்றில் ஹசீனாவின் கட்சிக்கு நிதி ஆதரவளித்ததன் மூலம், ஹசீனாவுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி, கொலை முயற்​சி​யில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டுக்​காக நுஷ்ரத் பரியா கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவர் வெளி​நாட்​டுக்கு செல்ல டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலை​யத்​துக்கு வந்​த​போது நுஸ்​ரத் ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​யப்​பட்​டார். இதையடுத்​து, அவர் உள்​ளூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

அவரின் சட்டத்தரணி பிணை கோரி நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​துள்​ளார். அவரது மனு மே 22 ஆம் திகதி விசா​ரணைக்கு வரவுள்​ளது.

நடிகை நுஸ்​ரத் பரியா தாய்​லாந்​துக்கு பயணிக்க திட்​ட​மிட்​டிருந்​த​தாக​வும் ஆனால், விமான நிலை​யத்​தில் அவர் போலீ​ஸா​ரால் தடுத்​து​நிறுத்​தப்​பட்டு கைது செய்​யப்​பட்​ட​தாக​வும் உள்​ளூர் ஊடகங்​கள் தெரி​வித்​துள்​ளன.

வழக்கு விவரங்களின்படி, கடந்த ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி, எனாமுல் ஹக் என்பவர், வதாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜூலை இயக்கத்தில் (அப்போதைய பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) பங்கேற்றார்.

அன்று, அவரது காலில் சுடப்பட்டது. பின்னர் அவர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பிறகு, இந்த ஆண்டு மே 3 ஆம் திகதி அவர் வழக்கைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 17 கலைஞர்கள் உட்பட 283 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

நுஸ்ரத் ஃபரியா 207வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு அவரை அவாமி லீக்கின் நிதி ஆதரவாளராக அடையாளம் காட்டுகிறது. அத்துடன், ஜூலை போராட்ட இயக்கத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததையும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.

நுஸ்ரத் ஃபரியாவின் கைது பங்களாதேஷ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹசீனா தப்பியோடிய பின், அவரது கட்சியை தடை செய்து, அவர் மீது ஏராளம் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவரது கட்சிக்கு நிதியளித்ததன் மூலம் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது, பரபலான விமர்சனத்தை தூண்டியுள்ளது.

பங்களாதேஷ் கலாச்சார விவகார ஆலோசகர் மொஸ்டோபா சர்வார் ஃபரூக்கி இது பற்றி கூறும்போது, “ஃபரியாவின் கைது சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

எனினும், உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முகமது ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி, நடிகை நுஸ்ரத் மீது சட்ட வழக்கு நடந்து வருவதாகவும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். நுஸ்ரத் ஃபரியாவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதாகவும், அவர் அதை மீற முயன்றபோது கைதானதாகவும் தெரிவித்தார்.

“அவர் விடுவிக்கப்பட்டிருந்தால், மக்கள் அவரை விடுவித்ததாகச் சொல்லியிருப்பார்கள். இப்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். யாராவது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என அவர் கேட்டார்.

ஷேக் முஜிபுர் ரஹ்​மான் பற்​றிய ‘முஜிப் தி மேக்​கிங் ஆப் ஏ நேஷன்’ என்ற வாழ்க்கை வரலாற்​றுப் படத்​தில் வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வாக நடித்​ததற்​காக நுஸ்​ரத் பரியா நன்கு அறியப்​பட்​ட​வர். இந்த படம் பிரபல இயக்​குநர் ஷியாம் பெனகல் இயக்​கத்​தில் வெளி​யானது. இந்​தப் படத்தை வங்​கதேசம் மற்​றும் இந்​தியா இணைந்து தயாரித்தன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்