கள்ளமண் ஏற்றிய டிப்பரை சுட்டுப்பிடித்த பொலிசார்

Date:

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வரணி மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது-

பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்தனர். எனினும், டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது. இதையடுத்து கொடிகாமம் பகுதியிலும் பொலிஸார் நிறுத்த முயற்சித்தனர். எனினும் டிப்பர் வாகனம் நிறுத்தாது வரணியை நோக்கி தப்பியோடியது.
இதையடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை தமது வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளனர். டிப்பர் வாகனம் வரணி மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாகத் தப்பியோடியது.

இதன் போது டிப்பரில் இருந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டோர்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியை பாய்ச்சியிருந்தனர்.

இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் டிப்பார் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கி ரவைகள் டிப்பர் வாகனத்தின் ரயரை வெடிக்கச் செய்ததுடன் எரிபொருள் தாங்கியையும் துளையிட்டுள்ளன

இதையடுத்து டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பித்துள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்