அர்ச்சுனாவின் சட்டத்தரணி இல்லாததால் வழக்கு ஒத்திவைப்பு!

Date:

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான தகுதியை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் ஆஜரான இளநிலை சட்டத்தரணி, மூத்த சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு வழக்கில் இருப்பதால், வழக்கை ஒத்திவைக்கக் கோரினார்.

அதன்படி, இரு தரப்பினரின் ஒப்புதலுடன், இந்த வழக்கு ஜூன் 26, 2025 மற்றும் ஜூலை 2, 2025 ஆகிய திகதிகளில் விசாரிக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

மனுதாரர் ஓஷல ஹெரத் சார்பாக சட்டத்தரணி என்.கே. அசோக்பரன் ஆஜரானார். முதல் பிரதிவாதியான எம்பி அர்ச்சுனா இராமநாதன் சார்பாக இளநிலை சட்டத்தரணி நிஷாதி விக்ரமசிங்க ஆஜரானார். அரச தரப்புகள் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன பிசி ஆஜரானார்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்