மாணவி அம்ஷிகா மரணம்: குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு இடமாற்றம்!

Date:

கொட்டாஞ்சேனையில் சமீபத்தில் பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலையுடன் தொடர்புடைய பதட்டமான சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

விளக்கம் பெற பாடசாலை அதிபரை அழைத்ததாகவும், அதன் பிறகு இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனையில் 16 வயது அம்ஷிகா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டா. அதன் பின்னர் அவரது மரணம் பாடசாலையில் ஒரு ஆண் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டது மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

பம்பலப்பிட்டி காவல்துறையில் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார், ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

16 வயது சிறுமிக்கு நீதி கேட்டு இன்று பாடசாலையின் முன் போராட்டம் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர், அதே நேரத்தில் குற்றவாளியை காப்பாற்றியதாக அவர்கள் பாடசாலை அதிபர் மீதும் அதிருப்தி தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்