கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

Date:

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கொட்டஹேனா ராஜேஸ்வரி கல்வி நிலையம் வரை போராட்டம் நடந்தது.

மேற்படி பாடசாலையில் மாணவி துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். குறித்த ஆசிரியரின் நண்பரான தனியார் கல்வி நிலைய ஆசிரியர், தனது பாடசாலையில் கல்வி கற்ற அம்ஷிகாவை மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தியுள்ளார்.

குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்