மனைவிக்கு பிரியாணி செய்ய தெரியாததால் 4 மாதத்தில் விவாகரத்து கோரிய டென்மார்க் மாப்பிள்ளை.. யாழில் வினோத சம்பவம்!

Date:

தனது புது மனைவிக்கு சுவையாக பிரியாணி செய்ய தெரியவில்லையன குறிப்பிட்டு, விவகாரத்து கோரியுள்ளார் வெளிநாட்டு மாப்பிள்ளை.

இந்த சுவாரஸ்ய சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

திருமணமான 4 மாதங்களில் மாப்பிள்ளை விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவர் இளம்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பற்றவிதமாக விளையாடி வருவதாகவும் மணமகள் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

யாழ் மாவிட்டபுரம் பகுதியை பூர்வீகமாக கொண்டு, தற்போது டென்மார்க்கில் வதியும் 41 வயதான ஒருவரே இந்த விவகாரத்து வழக்கை அண்மையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில், மணமகளுடன் மனமொன்றி வாழ முடியவில்லையென்றே குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தனது மனைவி சுவையாக பிரியாணி சமைக்கவில்லையென குற்றம்சாட்டியே பிரச்சினையை ஆரம்பித்து, பிரியாணி கூட செய்ய முடியாத பெண்ணை டென்மார்க்கிற்கு அழைத்து செல்ல தனக்கு வெட்கமாக உள்ளதென்றே தம்மிடம் தெரிவித்ததாக மணமகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்ணொருவருடன் இந்த வருட ஆரம்பத்தில் டென்மார்க் வாசிக்கு திருமணமானது. திருமணமாகி ஒன்றரை மாதங்கள் இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தியுள்ளனர். அவர் டென்மார்க் சென்று, மனைவியை அங்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையை விட்டு புறப்படுவதற்கு சற்று முன்னதாக மனைவி குடும்பத்தினருடன் அந்த நபர் மோதலை ஏற்படுத்தியுள்ளார்.

மனைவியை பிரியாணி தயாரிக்குமாறு அவர் கேட்டுள்ளார். மனைவி தயாரித்த பிரியாணியை சாப்பிடவே முடியவில்லையென்றும், பிரியாணி தயாரிக்க முடியாத மனைவியை டென்மார்க் அழைத்து செல்வது தனக்கு வெட்கம் என்றும் குறிப்பிட்டு, மனைவி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் டென்மார்க் சென்ற பின்னர், மனைவி குடும்பத்தினருடனான தொடர்பை துண்டித்து விட்டார்.

தற்போது, சட்டத்தரணி ஒருவர் மூலம் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி நபர் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், அந்த திருமணத்தையும் 6 மாதங்களில் முறித்துக் கொண்டதாகவும், அவர் இலங்கை வரும் போது பொழுதுபோக்காக திருமணங்கள் செய்து, பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் மணமகள் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்