விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழப்பு!

Date:

அக்கரைப்பற்று – பொத்துவில் A-04 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

அக்கரைப்பற்று – பொத்துவில் A-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற கார் ஒன்று, வீதியில் சென்ற மாடு மீது மோதி நேற்று (23) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்த நேரத்தில் காரில் சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தையும் இருந்துள்ளதுடன், காயமடைந்த குழந்தை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தது.

அட்டாளைச்சேனை 05 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 9 மாதக் குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...

சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப்...

ஹோர்முஸ் ஜலசந்தி பேச்சில் முன்னேற்றம்: அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அதிக கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈரான் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்