அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப்பாலின உறுப்பினர்களின் சேவையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தை பெண்டகன் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, மாற்றுப்பாலினத்தவர்கள் இனிமேல் அமெரிக்க இராணுவத்தில் சேரவும், பணியாற்றவும் முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய உத்தரவுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, தற்போதைய அறிவிப்பில், இராணுவத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களை நீக்குவதற்கான செயல்முறைகளை பெண்டகன் அறிவித்துள்ளது.
அதன்படி, முதலில் 30 நாட்களுக்குள் மாற்றுப்பாலின உறுப்பினர்களை அடையாளம் காணும் நடைமுறை உருவாக்கப்படும். அதன் பின்னர், மேலும் 30 நாட்களுக்குள் அவர்களை இராணுவத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு மாற்றுப்பாலின சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், மாற்றுப்பாலின உரிமைகளை ஆதரிக்கும் அமைப்புகள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளன.
தற்போது, இந்த புதிய அரசியல் தீர்மானம் அமுலுக்கு வரும் சூழ்நிலைகள் குறித்து உரிய பதில்களை பெண்டகன் தரப்பில் இருந்து எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



