சர்வதேச மகளிர் தினம் இம்முறை ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் அடிப்படையில், நிலையான எதிர்காலத்தை அமைக்க ‘வலிமைமிக்க அவளே முன்னோக்கிய வழி’ என்ற பிரதான கருப்பொருளுடன் மார்ச் 2ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை தேசிய மகளிர் வாரத்தை பிரகடனப்படுத்தி சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டங்களைக் காணவுள்ளது.
தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக்கு துறைசார் அமைச்சர் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏற்பாட்டில், 1977ம் ஆண்டில் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர், உலகம் முழுவதும் ஐ.நா.உறுப்பு நாடுகளில் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.