29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
கிழக்கு

குமாரபுரம் விபத்தால் உருவான வன்முறைகள்; நால்வர் வைத்தியசாலையில்

மூதூர், கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் நேற்று (24.02.2025) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மட்டக்களப்பிலிருந்து தெகிவத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனம், கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில், திருகோணமலையில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அப்பகுதியில் நின்ற நபர்கள்மீது மோதியதில், முச்சக்கரவண்டியில் இருந்த பெண் ஒருவரும் வீதியில் நின்ற நபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதுடன், இதில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அங்கு இருந்த ஊர் மக்களும் வாகனத்தில் வந்தவர்களும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், அயலூர் சிங்களக் கிராமத்திலிருந்து ஆயுதங்களுடன் சில இளைஞர்கள் வருகை தந்து, குமாரபுரம் பகுதியில் நின்றவர்கள்மீதும், கூலி வேலை செய்து கொண்டிருந்தவர்கள்மீதும், வீடுகளுக்குள் நுழைந்தும் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, அப்பகுதியில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த மூதூர் பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறினாலும், பெளத்த பிக்குமாரின் செயற்பாடுகளுடன் இணைந்து, சிங்களக் காடையர்கள் அப்பாவி கிராமவாசிகள்மீது தாக்குதல் நடத்த உதவியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சம்பவத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாத இரண்டு அப்பாவிப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன் தாக்கப்படுகிறோம் என்பதே அறியாமல் அடியுண்டவர்களுக்கு கைப்பிடி விலங்குகள் போடப்பட்டுள்ளதென தகவல்கள் வெளிவந்துள்ளன.

பொலிஸாரினதும், பெளத்த பிக்குகளினதும் ஆதரவுடன் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதற்கான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரால் முரண்பாடுகளை சுமூகமாக முடித்து வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Pagetamil

மாட்டிறைச்சி விலையை ரூ.1700 ஆக குறைப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு!

Pagetamil

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment