Pagetamil
உலகம்

அமெரிக்க நிதி நிறுத்தம்: ஐக்கிய நாடுகளின் இலங்கை திட்டங்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பது, இலங்கையில் பல முக்கியமான திட்டங்களை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு உட்பட்டவையும் அடங்கும் என்று, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் திட்டங்கள் சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை, அமெரிக்க உதவி அதன் ஆண்டு ஒதுக்கீட்டில் சுமார் 12 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று ஃபிரான்ச் கூறியுள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நாடு, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க நிதி மற்றும் ஈடுபாடு குறித்த பொதுவான மதிப்பாய்வை மேற்கொள்ளும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

Pagetamil

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

Leave a Comment