துப்பாக்கி சூட்டில் 6 வயது குழந்தை உட்பட இருவர் பலி

Date:

மித்தெனியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 வயது குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடேவத்த சந்தியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் அவரது 6 வயது மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்ததாவது, உயிரிழந்த தந்தை மற்றும் அவரது மகள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது 6 வயது மகள் உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த தந்தையும் மகளும் கல்பொத்த வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குழந்தை பலியாகியுள்ள இந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய கடன் இணையத்திருடர்களிடம் சென்ற விவகாரம்: நிதியமைச்சு விசாரணைக்குழு நியமித்தது!

அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்