ரயில் மோதி முதியவர் பலி

Date:

ரயிலில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயில், தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் சென்றுக்கொண்டிருந்த போது, ரயில் மோதி சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில், மோதி பலத்த காயமடைந்த அந்த நபர், உடனடியாக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

எனினும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் முழு விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்த மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய கடன் இணையத்திருடர்களிடம் சென்ற விவகாரம்: நிதியமைச்சு விசாரணைக்குழு நியமித்தது!

அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான...

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை செலுத்திய 2.5 மில்லியன் டொலரை சுருட்டிய கணனி ஹக்கர்!

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டியிருந்த 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான, கடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்