மாங்குளத்தில் செய்தியாளருக்கு கொலை மிரட்டல்: கள்ளமண்காரர் அட்டகாசம்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பனிக்கன்குளம், கிழவன்குளம், பதினெட்டாம் போர், கொக்காவில் உள்ளிட்ட
பகுதிகளில் ஏ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில்
சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது

அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும்
அனுமதி பத்திரங்கள் பெறப்படாதும் சட்டவிரோதமாக ஆற்றிலே உழவு இயந்திரங்களை
விட்டு மணலை ஏற்றி காட்டுப்பகுதிகளிலேயே மணலை பறித்து காட்டுக்குள்
டிப்பர் வாகனங்களை கொண்டு சென்று மண் ஏற்றும், மரம் கடத்துகின்ற
பல்வேறு குற்ற செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பதினெட்டாம் போர் பகுதியில் இன்றைய
தினம் நண்பகல் வேளையிலே ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் குறித்த விடயங்களை
செய்தி சேகரிக்க சென்று இருந்தார்.

இதன்போது ஏ 9 வீதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்டு
பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவு செய்து
கொண்டிருந்தபோது NP BFR 8429 மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்
ஊடகவியலாளர் தவசீலன் அவர்களது ஒளிப்படகருவியை பறிக்க முற்பட்டதோடு
ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலை அச்சுறுத்தல்
விடுத்து நிலையில் மாங்குளம் போலீசாரின் உதவியுடன் தவசீலன் குறித்த
இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

காட்டுக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது மாத்திரமின்றி அங்கு
வந்து யார் வீடியோ எடுக்க சென்னது என்றும் வீடியோ எடுக்க விடாது
தடுத்து சட்டவிரோத மணலுடன் நின்ற உழவு இயந்திரத்தை அந்த இடத்தில் இருந்து
எடுத்து சென்றதோடு ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிசார் குறித்த காட்டுக்குள்
செல்லும் வீதியை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டி காட்டுக்குள்
செல்லமுடியாதவாறு செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்