கதிர்காமம் பொது பஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (14) இரவு, பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கழிப்பறை பகுதியில், குறித்த இளைஞர் தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்றும் அவர் பல நாட்களாக கதிர்காம நகரத்தில் சுற்றித் திரிந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், கதிர்காமம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தற்கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியாக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், குறித்த இளைஞரின் அடையாளம் மற்றும் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.