இன்று (15) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில், அவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (15) கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிறகு, அவர் யாழ்ப்பாணம் நோக்கி தனக்கு சொந்தமான வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வாகனம் தனங்களப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் எம்பிக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதோடு, அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன