மதுபானசாலைக்கு எதிராக பூநகரியிலும் போராட்டம்

Date:

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன் மக்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றக்கோரி பிரதேச மக்கள் பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட A 32 பிரதான வீதியின் வாடியடி சந்தியை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதனையடுத்து, பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர்களை போராட்டத்தில் பங்கேற்ற மக்களால் கையளிக்கப்பட்டிருந்தது.

இதே போல, பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிரான மக்களின் தொடர் போராட்டமும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்