வெல்லாவெளியில் பாலம் உடைந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நீரோடை ஒன்றில் வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று (13) மாலை 5:45 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார், பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து நீரோடையில் கவிழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1