லிபியாவின் கடற்கரையில் 64 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீதமுள்ள 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில், இந்த பயணிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பலர் கடல் மார்க்கமாக புறப்பட்டு, லிபியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவின் தலைநகரமான ட்ரிபோலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், இந்த விபத்துக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவர்களின் கடவுச்சீட்டுகளை வைத்து அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதும் சரிபார்க்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1