பதுளை – எல்ல நானு ஓயா ஒடிசி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கி வந்த ஒடிசி ரயில், ஹாலி எலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த நபர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவவத்தை தொடர்ந்து, உயிரிழந்த நபரின் சடலம் பதுளை ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் இதுவரை யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும், அவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்திற்கான உண்மைக் காரணம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1