திருகோணமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி தேவஸ்தான இசை நடன கலாலயம் தனது 25வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று (2025.02.11) மாலை 04.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் “வெள்ளி விழா” நிகழ்வு ஒன்றை நாடாத்த ஒழுங்கு செய்துள்ளது.
இந்த கலாலயம், கடந்த 25 ஆண்டுகளாக திருகோணமலையில் கட்டணம் ஏதும் பெறாமல் பரதநாட்டியம், புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, வீணை, வயலின் சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வமுள்ள திருமலை வாசிகளுக்கு இலவசமாக கற்கைநெறிகளை வழங்கி, வட இலங்கை சங்கீத சபைத் தேர்வுகளில் பல மாணவர்களை சித்தியடைவதற்கு வழிகாட்டிய பெருமை பெற்றுள்ளது.
இதனடிப்படையில், குறித்த கலாலயம் மற்றும் அதன் நிறுவுனர் சங்கீத கலாவித்தகி திருமதி விஜயாகுமாரி தவசிலிங்கம் அவர்களும் அவரின் தன்னார்வப் பணிகளுக்கு கிடைத்த நல்ல மதிப்புக்காக சமூகத்தில் மிகவும் பாராட்டப்படுகிறார்.
குறித்த இவ் “வெள்ளி விழா” நிகழ்வில் பங்குபெற மற்றும் சிறப்பித்துக் கொள்வதற்காக, கலாலய நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்களிடமிருந்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,