Pagetamil
இலங்கை

மின்சார செலவை குறைக்கும் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு

மின்சாரக் கட்டணங்களில் நிலையான விலையை வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன் மூலம், மின்சார செலவுகளை கட்டுப்படுத்தி, மக்களின் பொருளாதாரப் பாரத்தை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த திட்டத்திற்கான முக்கிய அம்சமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்சாரத் துறையில் செலவினங்களை குறைத்து நிரந்தரமாக மின்சாரக் கட்டணங்களை பொதுமக்கள் ஏற்கத்தக்க முறையில் வைக்க அரசாங்கம் கடுமையாக செயல்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்ல அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீடித்த முன்னேற்றத்தைக் கொண்டுவரும் வகையில் எரிசக்தித் துறையில் மறுசீரமைப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு, கொழும்பில் நடைபெற்ற ஏற்றுமதி விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி உரையாற்றியபோது வெளியிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Pagetamil

யாழில் ஜேவிபி வேட்புமனு தாக்கல்

Pagetamil

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் சொத்து என எடுத்தியம்ப ஒரு வாய்ப்பு – சுமந்திரன் கருத்து

Pagetamil

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

Leave a Comment