பாழையவாடியில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பலி

Date:

பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (7) பதிவாகியுள்ளது.

வவுனியா, பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக நீர் இறைக்கும் மோட்டாரின் மீது விழுந்துள்ளார். இதன்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியின் மூலம் மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்