“தைலாப்பொட்டி” நூல் வெளியீட்டு விழா

Date:

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது எழுதிய தைலாப்பொட்டி நூல் வெளியீடும், அறிமுகமும், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீது அரங்கில் நடைபெற்ற “தைலாப்பொட்டி” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையிலே நடைபெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக சபுத்தி அமைப்பின் தவிசாளர் கலாநிதி தமீர மஞ்சு, இலங்கை நீதிக்கான மய்யம் தலைவர் சட்டமுதுமாணி சௌபி எச்.இஸ்மாயீல், ஓய்வு நிலை அதிபர் அ.பேரின்பராஜா, சபுத்தி அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி இரோசானி கல்ஹேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி அபரசிரி விக்கிரமரத்ன, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். அப்துல் ரசாக், அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்ல நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மசூர், சிரேஷ்ட எழுத்தாளர் செங்கதிரோன் ஆகியோரால் நூல் தொடர்பாக சிறப்புரைகள் இந்நிகழ்வின் போது இடம்பெற்றன.

நூல் வெளியீடு, பிரமுகர்கள் உரை, திறன் நோக்கு, அபிநயப் பாடல், வாழ்த்துப் பா என சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் கல்வியாளர்கள், உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்