இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் Novice Chess Championship 2025 திருகோணமலை மாவட்ட போட்டிகள் நேற்றும்(7), இன்றும் (8) தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. நாளையும் (9) நடைபெறவுள்ளது.
ஏற்கனவே Majors Championship போட்டிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் Rated Players தவிர்ந்த அனைவரும் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இவை வயது வரம்பின்றி திறந்த பிரிவுப் போட்டிகளாக நடாத்தப்படுவதோடு, போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக மட்டுமே இடம்பெறுகின்றது. திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு பாடசாலை மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கு கொள்கின்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்த கட்டமான Majors Championship போட்டிகளில் பங்கேற்க தகுதியைப் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




