பட்டாபுர நீர் நிலையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடை 4 பிள்ளைகளின் தந்தையான சேதுநாதபிள்ளை ஆவார்.
இன்று (06) அதிகாலை மீன் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட இவர், பகல் வேளையாகியும் காணவில்லை என உறவினர்கள் தேடிச் சென்ற நிலையிலேயே அவர் நீர் நிலையில் சடலமாக கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இச்சம்பவம் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1