Pagetamil
இலங்கை

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

அரச சேவைக்குள் 35,000 பட்டதாரிகளை இணைக்கும் திட்டம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் உடனடியாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களுக்கான வெற்றிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும் என அமைச்சர் கூறினார். அதே நேரத்தில், 30,000 அல்லது 35,000 என நிர்ணயிக்க முடியாது, இருப்பதால், பட்டதாரிகள் குழுவிலிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மேலும் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் விளக்கினார்.

மேலும், அரச சேவையில் பயன்படுத்தப்படாத பட்டதாரிகள் குழுவொன்று இருப்பதாகவும், அவர்களை இணைக்கும் புதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் தேவையான ஆட்சேர்ப்புகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதகல் கடலில் இளைஞன் பலி

Pagetamil

பியூமியை பணமோசடி தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உத்தரவு!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச்சூடு: 6 சந்தேகநபர்களுக்கு பிணை!

Pagetamil

நில மோசடி விவகாரத்தில் மஹிந்த மனைவியும் விசாரணை வளையத்தில்

Pagetamil

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment