கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனம் கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டு அதை முறைகேடாக பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




