மட்டக்களப்பில் மக்கள் சேவைகளில் வெளிப்படைத் தன்மைக்கு முன்னேற்றம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் “க்ளீனிங் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக இன்று (03) காலை மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் புதிய அரசாங்கத்தின் முக்கிய கொள்கையான “இலஞ்ச ஊழல் அற்ற சேவையை மக்களுக்கு வழங்குதல்” என்பதனை முன்னிறுத்தும் வகையில் “இலஞ்ச ஊழல் அற்ற பாதை” எனும் திறப்பு விழா நிகழ்வு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் மக்கள் சேவைகளை வெளிப்படையாக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் மாநகர சபையின் செய்தி இணையத்தளம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்ஞயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ். சித்திரவேல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும், நகரில் உள்ள மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநகர சபையில் முதல் முறையாக வீதிகளில் பொதுமக்கள் கழிவுகளை தவறாக அகற்றுவதை கண்காணிக்க திருமலை வீதி மற்றும் சத்துருக்கொண்டான் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் நிகழ்வும் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்