மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடை பாரிய நட்டம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். படுவான்கரைப் பெருநிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைச் செய்கை கடந்த வருட இறுதியிலும், இந்த வருட ஆரம்பத்திலும் ஏற்பட்ட அடை மழை மற்றும் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் எதிர்பார்த்த அறுவடை முழுமையாகக் கிடைக்காமல் போயுள்ளது.

மேலும், அறுவடை செய்யப்பட்ட மீதமான நெல்மணிகளில் கறுத்த புள்ளிகள், நிறை குறைவாகவும் பதமாகவும் காணப்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். கடந்த ஆண்டில் ஏக்கருக்கு 30 மூடைகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 15 மூடைகளாக குறைந்துள்ளது.

அத்துடன், வங்கிகளில் நகைகளை அடகு வைத்து, எண்ணை மற்றும் பசளைகளை கடனுக்கு பெற்றுள்ள விவசாயிகள், எதிர்பார்த்த இலாபத்தை பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனத்தில் கொண்டு நட்ட ஈடுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வயல்கள் ஈரமாக காணப்படுவதால் அறுவடை செய்வதில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வியாபாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்வனவு செய்யும் நிலையும் உருவாகி வருவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்