கட்டுநாயக்க விமான நிலையத்தில், 02 கிலோ குஷ் போதைப்பொருளுடன் வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் விமான நிலையக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 36 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ஒருவர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் உடுகம்பல பகுதியைச் சேர்ந்தவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1