அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தும் நடவடிக்கையில், 3,065 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய அமெரிக்க நிர்வாகத்தின் கீழ், நாடு கடத்தப்பட உள்ள சட்டவிரோத குடியேற்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கை 1,445,549 ஆக இருப்பதாக ICE தெரிவித்துள்ளது. இதற்காக, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அந்த பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்பதால், இலங்கையர்கள் நாடு திரும்புவதில் எந்த தடையும் இருக்க வாய்ப்பில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.