இலங்கை தமிழ் அரசுக் கூட்டமைப்பின் தலைவரும் அரசியல் மூத்த தலைவருமான திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று காலை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட CT scan பரிசோதனை மூலம் அவரது தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, தற்போது நிபுணர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1