முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து அவர், 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ச நாட்டின் புகழ்பெற்ற தலைவராக மாறினார் என்று குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின் போன்றவர்களின் உடல்கள் பாதுகாக்கப்பட்டதுபோல, மஹிந்த ராஜபக்சவின் உடலையும் எதிர்கால சந்ததியினரால் மதிக்கப்படும் வகையில் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந் நாடுகளின் தலைவர்கள், எவ்வளவு விலை கொடுத்தாலும், அத்தகைய தலைவர்கள் அவர்களின் மறைவுக்குப் பிறகும் எதிர்கால சந்ததியினரால் மதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதுபோன்று, மஹிந்த ராஜபக்சவின் புகழை நிலைத்து நிறுத்த அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் தனது கருத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.