26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினமான பெப்பவரி 4 ஆம் நாளை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் உலகுக்கு மடுமல்லாமல் அனுர அரசுக்கும் எடுத்துக் கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இறுதி யுத்த காலப்பகுதியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்க உறுப்பினர்கள் இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா கூறுகையில் –

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி, அதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து பல வருடங்களாக உறவுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எதுவிதமான தீர்வுகளும் கிடைக்கப் பெறவில்லை.

சுமார் 18 ஆயிரத்துற்கும் அதிகமான உறவுகள் காணாமலாக்கப்படுள்ளனர்.
இது தொடர்பில் பல்வேறு வகையில் வடக்கு கிழக்கெங்கும் எமது சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து எமது வலிகளை வெளிப்படுத்தியிருந்தது.

இதே நேரம் இக்காலப் பகுதியில் நீதிவேண்டி போராட்டத்தை முன்னெடுத்த உறவுகளின் அன்னையர்கள் 300 இற்கும் அதிகமானோர் இறத்துவிட்டனர்.

ஆனால் தீர்வு தருகின்றோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஒவ்வொன்றும் தமது இயல்பான போக்கையே தொடர்ந்தும் முன்னெடுக்கின்றன. ஆனால் எமது மக்களுக்கு எதுவித தீர்வுகளோ நன்மைகளும் கிடைக்கவில்லை.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் எமது மக்களுக்கு இன்னமும் அதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த எதிர்ப்பு தினத்தை வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

எமது இந்த போராட்டத்துக்கு பல்கலைக்கழகம், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், பொது போக்குவரத்து மற்றும் அனைத்து தரப்பினரும் அதரவளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என்றும் தெரிவித்துகொள்கின்றோம்.

இதேவேளை மாற்றங்கள் நிகழுமென்று கூறி மாறிமாறி வந்த அரசுகளால் வேதனைகளை தவிர வேறெதுவும் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

மாறாக சிங்கள் குடியேற்றங்களுக்கான முஸ்தீபுகளையே திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றது என வடக்கு கிழக்கு பெண்கள் வலையமைப்பு தலைவி
ஜெயானந்தன் ஜெயச்சித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை அடக்கு முறைகளும், அடாவடிகளுமே எமது இனத்துக்கெதிராக நடந்தேறுகின்றன,

அதைவிட தமது இனப் பரம்பலை வட கிழக்கிலும் வலுவாக்க கடந்த அரசுகளை விட இந்த அரசு முனைப்புடன் செயற்படுகின்றது.

இதற்காக மகாவலி விரிவாக்கல் என்ற குறியீட்டுடன் சிங்களவர்களை குடியமர்த்த மும்மும்முரமாக செயற்படுகின்றது. இதை ஏற்க முடியாது.

அதுமட்டுமல்லாது இந்த அனுர அரசும் சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறியுள்ளது.

அனுர அரசின் இந்த செயற்பாடானது கடந்த கால அரசின் கொள்கையை முன்னெடுப்பதாகவே இருக்கின்றது.

அந்த வகையில் அனுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது.
எனவே அனுர அரசின் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை கரி நாளாக கடைப்பிடிப்பதற்கு அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

Leave a Comment