Pagetamil
இலங்கை

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும் இவர், கடந்த 13ம் திகதி கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

நேற்று (25.01.2025) நள்ளிரவு, பல்கலைக்கழக விரிவுரையாளருடன் ஜூம் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பதிவாளர் வீதியில் அவரது சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இவர் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் பசுமை இயக்கத்தின் தலைவருமான ஐங்கரநேசனின் தம்பி ஆவார்.

இந்த திடீர் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதகல் கடலில் இளைஞன் பலி

Pagetamil

பியூமியை பணமோசடி தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உத்தரவு!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச்சூடு: 6 சந்தேகநபர்களுக்கு பிணை!

Pagetamil

நில மோசடி விவகாரத்தில் மஹிந்த மனைவியும் விசாரணை வளையத்தில்

Pagetamil

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment