தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Date:

நாடளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த சந்திப்பு நாளை (ஜன.25) நடைபெறுவதாக இருந்தது. எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, சந்திப்புக்கு முறைப்படியான அழைப்பு தமக்கு கிடைக்கவில்லையென தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நாளை நடைபெற திட்டமிட்டிருந்த சந்திப்பை 27ஆம் திகதிக்கு தள்ளிவைத்துள்ளதாகவும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு முறைப்படியான அழைப்பை இன்று (24) மாலை அனுப்பியுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முன்முயற்சியில் இந்த சந்திப்பு நகர்வு ஆரம்பிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் அரசில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரத்தை கையிலெடுத்தால், தமிழ் தரப்புக்கள் ஓரணியில் அதை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நகர்வு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி மோதலால் இந்த நகர்வில் தமிழ் அரசு கட்சி பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்