மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

Date:

மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சோகமிக்க ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் புஷ்பக் ரயிலின் பயணிகளுக்கிடையில் அதிர்ச்சியையும் பெருந் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பக் ரயிலில் ஃபயர் அலாரம் (Fire Alarm) ஒலித்ததால், பயணிகள் தங்கள் பாதுகாப்புக்காக அவசரமாக ரயிலில் இருந்து வெளியேற முயன்றனர். இதே சமயத்தில், எதிர்திசையில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது.

இதன்போது, 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஃபயர் அலாரம் தவறாக செயல்பட்டதா, அல்லது உண்மையில் தீ விபத்து ஏற்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்